முல்லைத்தீவிலுள்ள உணவகம் ஒன்றில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் இருகடைகள் முற்றாக எரிந்து நாசம்!

முல்லைத்தீவு கிச்சிராபுரம் கிராம சேவையாளர் பிரிவிக்குட்பட்ட மாஞ்சோலை வைத்தியாசாலை முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் இருகடைகள் முற்றாக எரிந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று (16) காலை இடம்பெற்றுள்ளது.

தீ பரவியதை அடுத்து கடைகளிலுள்ள பொருட்கள் துரித கதியில் அகற்றப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த இராணுவம், பொலிஸார், அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்கள் இணைந்து தீயினை கடும் பிரயத்தனத்தின் மத்தியில் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்து பார்வையிட்டனர்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு வசதி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை, தீ பரவும் சந்தர்ப்பத்தில் தீயணைப்பு கருவி இல்லாத காரணத்தினலே பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply