மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ப்பதற்ற சூழல் காரணமா எரிபொருள் விநியோகம் தடைபடலாம் என்ற அச்சத்தில் நேற்று முதல் எரிபொருளை பெற்றுக்கொள்வதத்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்துநிற்கின்றனர்.
குறிப்பாக யாழ் நகர், மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துள்ளனர்.
இந்தநிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர், எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும், மக்களே எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் ஒன்றுகூடி நின்று எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை போதியளவு எரிபொருள் உள்ளதாகவும், செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம் என்று அரசாங்க அதிபர் எச்சரித்துள்ளார்.
