எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலியான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம்- எரிசக்தி அமைச்சு வலியுறுத்தல்!

எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலியான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாகவும், முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புகளைப் பெற தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply