தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த Al 159 ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

விமான விபத்துக்குப் பிறகு லண்டனுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியாவின் முதல் சேவையாக இது காணப்பட்டது.

Al 159 ஏர் இந்திய விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு மதியம் 1:10 மணிக்குப் புறப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இறுதி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டது.

இறுதி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த 200 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply