யாழ். பலாலி வீதி இரவு ஏழு மணி வரை திறந்திருக்கும்!

யாழ்ப்பாணம், பலாலி வீதி போக்குவரத்திற்காக இரவு ஏழு மணி வரை திறந்திருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் கூட்டத்தில் தான் கலந்து கொண்டிருந்த வேளை, ஜனாதிபதியிடம் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாக வீதி இரவு 07 மணி வரையில் திறந்திருக்கும் என தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பலாலி வீதியானது வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை – பொன்னாலை வீதி வரையிலான சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வீதியானது காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மக்களின் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் குறித்த வீதியின் ஊடாக வேலைகளுக்கு சென்று வருபவர்கள் மாலை 05 மணிக்கு பாதை பூட்டப்படுவதால் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் மாற்று பாதை ஊடாக பயணித்து வந்தனர்.

இந்நிலையிலையே ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் கூட்டத்தில் வேலைக்கு போய் வருவோரின் நலன் கருதி வீதியினை இரவு 07 மணி வரைக்கும் திறக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் கோரிக்கையை முன் வைத்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த வீதியினை இரவு 07 மணி வரையில் திறக்குமாறு இராணுவத்தினருக்கு பணித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply