கொழும்பு மாநகர சபையின் புதிய மேஜராக தெரிவு செய்யப்பட்ட விராய் கெலி பல்தஸார் இன்று (18) பதவி ஏற்றுள்ளார்.
2025 உள்ளூராட்சித் தேர்தலில் அதிகம் அவதானம் செலுத்தப்பட்ட வேட்பாளராக இருந்த தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெல்லி பல்தாசர், நேற்று முன்தினம் (16) கொழும்பு மாநகர சபையின் மேயராக பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கடந்த 16ஆம் திகதி மேஜரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதன்போது தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட விராய் கெலி பல்தஸார் 61 வாக்குகளை பெற்று கொழும்பு மாநகர சபையின் புதிய மேஜராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
