கொலன்னாவ நகர சபை அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசமாகியது.
கொலன்னாவ நகர சபைக்கான மேஜர் தெரிவுக்கான கூட்டம் இன்று (18) காலை இடம்பெற்றது.
இதன் போது அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாக்கியது.
கொலன்னாவ நகர சபையில் தேசிய மக்கள் சக்திக்கு 9 ஆனங்களும், எதிர்க்கட்சிக்கு 10 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றன.
எனினும் எழுந்த பதட்டமான சூழ்நிலையை அடுத்து 9 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறிய நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற சுசில் குமார சபையில் தொடர்ந்து இருந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவைத் தெரிவித்தார்.
அதன்படி, நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 10 வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் தம்மிக்க விஜயமுனி கொலன்னாவ நகர சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
