வல்வெட்டித்துறை நகர சபை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வசம்!

வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக தவமலர் சுரேந்திரநாதன் தெரிவாகியுள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று (18) வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

16 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.

வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் பதவிக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் தவமலர் சுரேந்திரநாதன் போய்ட்டியிட்டு 7 வாக்குகளையும், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மகாலிங்கம் மயூரன் 6 வாக்குகளையும் பெற்றனர்.

இதன்படி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தவமலர் சுரேந்திரநாதன் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக தெரிவாகினார்.

பிரதி தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாகதம்பி பத்மநாதன் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply