மன்னார் பகுதியில் பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவி மீது பாலியல் சேட்டையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து முருங்கன் பகுதி நோக்கி இன்று காலை பயணித்து கொண்டிருந்த அரச பேருந்தில், பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது அப் பேருந்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் பாலியல் சேட்டை புரிந்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி, முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அளிக்கப்பட்ட முறைபாட்டுக்கு அமைவாக முருங்கன் பொலிஸார் குறித்த இராணுவ சிப்பாயை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
