வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக தியாகராஜா நிரோஷ் தெரிவு!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக கில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனனாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்றையதினம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் இடம்பெற்றது.

தவிசாளர் தெரிவின் முதலாம் சுற்றில் மூவர் போட்டியிட்ட நிலையில் பெரும்பான்மை இல்லாத நிலையில் இரண்டாம் சுற்று தெரிவு இரகசியமா பகிரங்கமா என்பது தொடர்பான வாக்கெடுப்பு சமமாக வந்த நிலையில் திருவுளச்சீட்டு முறைமூலம் இரகசிய வாக்கெடுப்பு நடத்துவது என தீர்மானித்து இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதனடிப்படையில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று சங்கு சைக்கிள் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply