முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய, மனைவி மற்றும் மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்றையதினம் (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சொத்துக்கள் மீதான விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) காலை லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply