வலி வடக்கு பிரதேச சபை இலங்கைத் தமிழரசுக் கட்சி வசம்!

வலி வடக்கு பிரதேச சபை தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவாகியுள்ளார்.

வலி வடக்கு பிரதேச சபை தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (18) வலி வடக்கு பிரதேசசபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.

நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலின் அடிப்படையில் 35 ஆசனங்களைக் கொண்ட வலி வடக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி 06 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 03 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 03 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 02 ஆசனங்களையும், தமாழ் மக்கள் கூட்டணி ஒரு ஆசனத்தையும் வென்றது.

வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவுக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் சோமசுந்தரம் சுகிர்தனும், தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் பத்மநாதன் சாருஜனும் போட்டியிட்டனர்.

தவிசாளர் தெரிவை பகிரங்க வாக்களிப்பு மூலமாக தெரிவு செய்ய 24 உறுப்பினர்களும் இரகசிய வாக்களிப்புக்கு 10 உறுப்பினர்களும்,
நடுநிலையாக ஒரு உறுப்பினரும் பகிரங்கமாக நடைபெற்ற தெரிவில் சோமசுந்தரம் சுகிர்தன் 14 வாக்குகளையும் பத்மநாதன் சாருஜன் 09 வாக்குகளையும் பெற்றனர்.

இதன்படி வலி வடக்கு பிரதேச சபை தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவானார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply