இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கில் பணம் வைப்புச் செய்த நபர் ஒருவர் கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு 50,000 ரூபாவை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்து, சந்தேக நபர் இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றியதாக தெரிவித்தனர்.

மேலும் விசாரணைகள் முடிவடையாததால், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கவே, உண்மைகளை பரிசீலித்த நீதவான், சம்பந்தப்பட்ட சந்தேக நபரை 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply