ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தத்தில்!

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.

இன்று (19) காலை ரயில்வே அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply