காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழுவின் கிருஷ்ணன் கோவிந்தராசன் தெரிவாகியுள்ளார்.
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று (19) காரைநகர் பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
11 உறுப்பினர்களை கொண்ட காரைநகர் பிரதேச சபைக்கு, நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுயேட்சை குழு, தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய மக்கள் சக்தி ஆகியன தலா 02 ஆசனங்களையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 01 ஆசனத்தையும் கைப்பற்றியது.
தவிசாளர் பதவிக்காக சுயேட்சை குழுவின் கிருஷ்ணன் கோவிந்தராசனின் பெயர் முன்மொழியப்பட்ட போது போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
அவ்வாறே பிரதி தவிசாளருக்காக தமிழ் மக்கள் கூட்டணியின் ஆன்டியையா விஜயராசாவின் பெயர் முன்மொழியப்பட்ட போது போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
