உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷின் முதலாவது இன்னிங்ஸ் இன்று காலை நிறைவுக்கு வந்தது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 495 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க தனது 3ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.
