திருகோணமலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை மாவட்டம், சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில், எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் மற்றும் வைத்தியர் பயணித்த முச்சக்கர வண்டி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
59 வயதுடைய வைத்தியரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
முச்சக்கர வண்டி ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
வைத்தியரின் சடலம் தற்போது சேருநுவர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
