நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!

திரைப்பட படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் இலங்கை நாடாளுமன்றத்துக்கு இன்று (19) விஜயம் மேற்கொண்டிருந்தார்.

பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலியின் அழைப்பிற்கு அமைய வருகை தந்த, பிரபல நடிகர் மோகன்லால் உள்ளிட்ட குழுவினர் சபாநாயகரின் கலரியில் இருந்து நாடாளுமன்ற அமர்வை பார்வையிட்டனர்.

இந்த விஜயத்தின் போது, ​​அவர் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் இதன்போது கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply