யாழில் போதை மாத்திரைகளுடன் 24 வயது இளைஞன் கைது!

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய், சுதுமலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

குறித்த கைது நடவடிக்கை யாழ் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் போதைப் பொருள் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட போது குறித்த நபரிடம் இருந்து 160 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (20) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply