ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

13 ஆசனங்களை கொண்ட பிரதேச சபையில், ஈழமக்கள் ஜனநாயக கட்சி 4 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தலா 03 ஆசனங்களையும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சி 2 ஆசனங்களையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தது.

இந்தநிலையில் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான இன்றைய தினம் நடைபெற்ற தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் அன்னராசா தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

உப தவிசாளராக செபஸ்தியான் பிள்ளை லெனின் ரஞ்சித்தும் தெரிவு செய்யப்பட்டார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply