5,000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் நேற்றையதினம் (20) ஹதரலியத்த பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
கண்டி, உடுவாவை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபர் ஒரு கடையில் 5,000 ரூபா போலி நாணயத் தாளை பயன்படுத்த முயன்றதையடுத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட போது சந்தேக நபரிடம் இருந்து ரூ.5,000, 500, 100 ஆகிய நோட்டுகளின் போலி பதிப்புகள் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து அவரது வீட்டில் சோதனை நடாத்திய வேளையில் 50, 100, 500 மற்றும் 5,000 ரூபாய்க்கான போலி நாணய அச்சு தாள்கள் மற்றும் கலகெதராவில் உள்ள அச்சிடும் இடத்திலிருந்து கணினி, பிரிண்டர் உள்ளிட்ட கருவிகள் கைப்பற்றப்பட்டன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹதரலியத்த பொலிசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
