கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி அ. நயோலின் அப்றியானா சாதனை புரிந்துள்ளார்.
தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8,9 ல் பங்கேற்ற அ. நயோலின் யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தையும், மஹரகம ஜனாதிபதி கல்லூரியில் கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
அவருக்கான சான்றிதழ் நேற்றைய தினம் கல்வி அமைச்சில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்னவால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த போட்டியில் வடமாகாண மாணவர்கள் பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் மாகாணங்களுக்கிடையிலான தரப்படுத்தல் வரிசையில் வட மாகாண மாணவர்கள் வடமாகாணத்திற்கு முதல் இடத்தைப் பெற்றுக் கொடுத்தது பெருமைக்குரிய விடயம் ஆகும்.

