இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக சில கறுப்பு ஆடுகள்- சி.வீ.கே சிவஞானம்!

இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக சில கறுப்பு ஆடுகளின் செயற்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வீ.கே சிவஞானம் சூளுரைத்துள்ளார்.

வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த விடயம் தொடர்பாக கட்சி சார்பாக அவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் வடக்கு பிரதேச சபையில் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமது உறுப்பினர் தமிழ் தேசியத்தோடு ஒன்றினைந்து செயற்படுவார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply