இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் காரணமாக, நைஜீரியாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய இலங்கை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் போர் பதற்றத்தினால் மசகு எண்ணெய் விலை உயர்வடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாக நைஜீரியா மற்றும் வேறு சில எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து மாதிரி தயாரிப்புகளைப் பெற்று, அவற்றின் நம்பகத்தன்மையை உள்ளூர் ஆய்வகங்களில் சோதிக்குமாறு தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருண தெரிவித்துள்ளார்.
