கார் விபத்து சம்பவம்- தாய் கண் முன்னே பறிபோன மகளின் உயிர்!

மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 15 வயது சிறுமி மற்றும் கார் சாரதி உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த கார் ஒன்று இரண்டாவது மைல்கல் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது காரை செலுத்திய சாரதி மற்றும் 15 வயது சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் தாய் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்துவரும் நிலையில், உயிரிழந்த சிறுமியான மகளுடன் கருவப்பங்கேணியில் உள்ள அவர்களது பன்றிவளர்க்கும் பண்ணையை பார்ப்பதற்காக சென்ற போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு சின்ன ஊறணி கருவப்பங்கேணி செலியன் வீதி இரண்டாம் குறுக்கைச் சேர்ந்த ஜெந்திரகுமார் சஞ்சய் மற்றும் நாவலர் வீதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியான பிரதீபன் தவஸ்வாணி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply