எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசை!

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க தொண்டங்கியுள்ளனர்.

அதன்படி இன்று யாழ்ப்பாணத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடுவதால் கச்சா எண்ணெய் பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கைக்கு ஹோர்முஸ் நீரிணைக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை என்றாலும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் மாற்றங்களால், அது இலங்கையின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் தற்போது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் விரைவில் அதன் தாக்கம் தென்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply