ஶ்ரீலங்கன் விமான சேவை குறித்து வெளியான அறிவிப்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

தற்போதைய பிராந்திய சூழ்நிலைகள் காரணமாக சில விமானங்களில் பயண தாமதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களும் வழமைபோல் இயக்கப்படும் என போக்குவரத்து அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கான குறிப்பாக குவைத், அபுதாபி மற்றும் தோஹாவுக்கு பறந்து கொண்டிருந்த 5 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு நேற்று திருப்பி விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தரையிறங்க ஏதேனும் விமானங்கள் கோரப்பட்டால், மத்தள விமான நிலையமும் கட்டுநாயக்க விமான நிலையமும் தயாராக இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டோஹாவில் அருகிலுள்ள அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்தும் பதிலடித் தாக்குதல்களை எதிர்பார்த்து நேற்று (23) மூடப்பட்டிருந்த தனது வான்வெளியை கட்டார் மீண்டும் திறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply