யாழ். செம்மணி ‘அணையா தீபம்’ போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய கிழக்கு மக்கள்!

யாழ். செம்மணி ‘அணையா தீபம்’ போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் உகந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்று நேற்று (23) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேசக் கண்காணிப்புடன் மனிதப் புதைகுழிகளின் அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் தீப்பந்தங்களை ஏந்தியவாறு நேற்று (23) மாலை குறித்த போராட்டம் முன்னெடுக்குக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தின் போது இலங்கை தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply