சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொன்னையா குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு நேற்றைய தினம் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் சாவகச்சேரி பிரதேச சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் பதவிக்காக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் பொன்னையா குகதாசனும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் செல்வரத்தினம் மயூரனும் போட்டியிட்டனர்.
வாக்கெடுப்பின் போது போட்டியிட்ட இருவரும் சரிசமமாக 10 வாக்குகளைப் பெற்றதால் திருவுளச்சீட்டு மூலம் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
இதன்போது தவிசாளராக இலங்கைத் தமிழரசுக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பொன்னையா குகதாசன் தெரிவானார்.
உப தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட இராமநாதன் யோகேஸ்வரன் தெரிவானார்.
