திருகோணமலை மாநகரசபையின் ஆட்சி அதிகாரம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வசமானது.
திருகோணமலை மாநகரசபையின் மேஜர் தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் நேற்று (23) நடைபெற்றது.
இதன்போது மேயர் பதவிக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் கந்தசாமி செல்வராஜா,தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கே.பி.ஜே.தனுஷ்க ஜெயலத் ஆகியோர் போட்டியிட்டனர்.
மேயர் பதவிக்கு இருவர் முன்மொழியப்பட்டதால் பகிரங்க வாக்கெடுப்பு நடப்பட்டது.
இதன்போது தமிழரசுக்கட்சி உறுப்பினர் கந்தசாமி செல்வராஜா 19 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கே.பி.ஜே.தனுஷ்க ஜெயலத் 06 வாக்குகளையும் பெற்றனர்.
இந்த நிலையில் 13 மேலதிக வாக்குகளால் தாமிழரசுக்கட்சி உறுப்பினர் கந்தசாமி செல்வராஜா மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நெய்னா முகம்மது மஹ்சூம் பிரதி மேயராக ஏகமனமாக தெரிவு செய்யப்பட்டார்.
