Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு மத்திய பேருந்து நிலையம் உட்பட நாடளாவிய ரீதியில் 50 பிரதான பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பாக நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
குறித்த வேலைத்திட்டத்திற்கு விமானப்படையின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், உணவகம், ஓய்வறை, டிக்கெட் கவுண்டர்கள், நிர்வாகப் பிரிவு, செயல்பாட்டு அறை மற்றும் சாரதிகள் தங்குமிடம் ஆகியவற்றை நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
