முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் தனிப்பட்ட பயணத்திற்கு அரச நிதி செலவிடப்பட்டதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சில் பணியாற்றிய 2 அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
