யாழ். மாவட்ட அரச அதிபராக ம. பிரதீபன் சம்பிரதாயபூர்வமாக பதவியேற்பு!

யாழ். மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் இன்றையதினம் (24) சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறித்த பதவியேற்பு நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட அரச அதிபர் ஸ்ரீமோகன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மதத் தலைவர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள், பிரதேச சபையின் செயலர்கள் மற்றும் யாழ் மாவட்டத்தின் பல்துறைசார் பொறுப்பு நிலை அதிகாரிகள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சக ஊழியர்களால் வரவேற்கப்பட்ட அரச அதிபர் பிரதீபன் மாவட்ட செயலரின் அதிகாரபூர்வ அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.

ம.பிரதீபன் 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்திருந்த நிலையில், அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் 20.06.2025 அன்று அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோ அவர்களினால் யாழ் மாவட்டத்தின் நிரந்தர அரச அதிபராக நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply