வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி 5 கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது!

கொழும்பு, கிருலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (24) மாலை இடம்பெற்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர், கொழும்பு மத்திய பிரிவு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்று விசாரணை நடத்தி இந்த சந்தேகநபரைக் கைது செய்தது.

தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, சுமார் 150 பேரிடமிருந்து 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்தமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொம்பனித்தெரு பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply