மாவை கந்தனின் மகோற்சவப் பெருவிழா- 35 வருடங்களுக்கு பின்னர் கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான பூர்வாங்க நிகழ்வுகள் இன்றைய தினம் காலை 06:00 மணிக்கு நடைபெற்றது.

கீரிமலை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து கீரிமலை – மாவிட்டபுரம் வீதி ஊடாக மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலுக்கு சகல உபச்சாரங்களுடன் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

உள்நாட்டு யுத்தம் காரணமாக நடைபெறாத இந்த நிகழ்வு, இம்முறை 35 வருடங்களின் பின் பாரம்பரியமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை சிறப்பிற்குரிய விடயமாகும்.

மாவை கந்தனின் மகோற்சவம் எதிர்வரும் 30ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஜூலை மாதம் 23ஆம் திகதி அன்றும், மறுநாள் ஆடி அமாவாசை தினத்தன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply