பதவி துறந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே துரைராசா ரவிகரன் பதவி விலகியுள்ளார்.

துரைராசா ரவிகரன் தனது பதவி விலகல் தொடர்பான முடிவை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோருக்கு நேற்றையதினம் கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply