ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று (26) காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக நேரப் பிரச்சினையை முன்வைத்து இன்று காலை7 மணி முதல் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரச்சினை தொடர்பில் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்று இலங்கை பொதுஜன ரயில்வே ஊழியர் சங்கத்தின் செயலாளர் நதீர மனோஜ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
