நயினை நாக பூசணி அம்மன் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க நயினை நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் (26) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று, 14ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஜூலை ஒன்பதாம் திகதியும், மறுநாள் 10ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.

மகோற்சவ காலங்களில் பக்தர்களின் நலன் கருதி விசேட படகு சேவைகள், பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளது.

அத்துடன் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி படையினர், சாரணர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரும் சேவையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply