ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஆகியோரிடையே சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கான தனது முதல் விஜயம் இதுவென குறிப்பிட்ட தபோ ம்பெக்கி, கடந்த காலங்களில் இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தில் ஆர்வமாக இருந்ததாக தெரிவித்ததுடன், இது போன்ற சமயத்தில் இலங்கைக்கு வருகை தருவது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்றும் கூறினார்.

தென்னாபிரிக்காவும் இலங்கையும் புவியியல் ரீதியாக தூரம் இருந்தாலும், வெவ்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் இருப்பதால் இரு நாடுகளும் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதில் இரு நாடுகளும் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றன என்றும், பல்வேறு வகையான மக்கள் குழுக்களை ஒன்றிணைப்பதில் இலங்கை ஜனாதிபதியுடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள தான் விருப்பத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார சவால்கள் மற்றும் தேசிய நல்லிணக்க சவால்களை பல்வேறு வகையான சவால்களை மக்கள் குழுக்களை ஒன்றிணைப்பதன் மூலம் இலங்கை ஜனாதிபதி சமாளிக்க முடியும் என்று ம்பெக்கி நம்பிக்கை தெரிவித்தார்.

நாடுகளுக்கு இடையே ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை சமாளித்து நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கும் தான் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply