பூஸ்ஸ சிறைச்சாலையில் தற்கொலைக்கு முயற்சித்த கைதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பூஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்புப் பிரிவு குற்றவாளிகள் அடைக்கப்பட்ட அறையில் இருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த வேளையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டு நேற்று கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பிம்சாரா அமல் என்ற கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எனினும் அவர் எந்த குற்றத்துக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
