மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டு பகுதியில் கார் ஒன்றில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் குருநாகல், மில்லேவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய உணவக தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த 25ஆம் திகதி தலைமுடியை திருத்துவதற்காக வீட்டைவிட்டுச் சென்றிருந்த நிலையில், அவர் வீடு திரும்பாததையடுத்து, அவரது மனைவி தொரடியாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.
பொலிஸார் விசாரணைக்காக அவரது மனைவியை அழைத்து விசாரித்தபோது, கண்டு பிடிக்கப்பட்ட உடல் அவரது கணவருடையது என அடையாளம் காணப்பட்டது.
இதனையடுத்து, குருநாகல் பொது வைத்தியசாலையில் இன்று (27) பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஹவ தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
