அமெரிக்க தூதரகம் இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

தமது குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை பெறும் நோக்கத்துடன் குழந்தை பிரசவிக்கும் காலங்களில் சுற்றுலா விசாக்களில் அமெரிக்காவுக்கு பயணம் செய்பவர்களுக்கு எதிர்காலத்தில் விசாக்கள் மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நோக்கத்துக்காக அமெரிக்கா செல்லும் பயணிகள் பெரும்பாலும் அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் மருத்துவ உதவியை நம்பியிருப்பதாகவும், இது அமெரிக்க வரி செலுத்துவோர் மீது நிதிச் சுமையை சுமத்துவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

எனவே, அமெரிக்கா செல்லும் விண்ணப்பதாரர் ஒருவரின் முதன்மை நோக்கம் குடியுரிமை சலுகைகளுக்காக பிரசவம் என்று நம்பினால், சுற்றுலா விசாக்களை நிராகரிக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply