வெலிகம பிரதேச சபை விசேட அமர்வில் கடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்கள்!

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்கான விசேட அமர்வு இன்றையதினம் நடைபெறவிருந்த நிலையில், இதற்காக வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அங்கு சபை அமர்வை நடத்த முடியாத பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட இரண்டு உறுப்பினர்களும் மீண்டும் அழைத்து வரப்பட்டால் மட்டுமே சபை நடவடிக்கைகளைத் தொடங்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply