நோர்வூட் பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்!

நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் தெரிவுக்கான அமர்வு மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் நோர்வூட் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்றையதினம் நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் பதவிக்காக தேசிய மக்கள் சக்தி சார்பாக ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக கணபதி குழந்தைவேல் ரவி ஆகியோர் போட்டியிட்டனர்.

நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் ர் ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன் 12 வாக்குகளையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கணபதி குழந்தைவேல் ரவி 07 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்படி தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன் பெரும்பான்மை வாக்குகளை பெற்றுபுதிய தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நடராஜா சிவக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply