இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற உப்பு தொகையை திருப்பியனுப்ப பரிந்துரை!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 05 கொள்கலன்களில் உள்ள உப்பு தொகை தரமற்றதாக உள்ளதால் அவற்றை திருப்பியனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து உப்பு கொள்கலன்களும் தரநிலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, 5 கொள்கலன்களில் உள்ள உப்பு தொகை தரமற்றவை என கண்டறியப்பட்டு இலங்கையின் தர ஆய்வுகளில் நிராகரிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 2000 கொள்கலன்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply