டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி வலுவான நிலையில்!

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

போட்டியின் போது தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 458 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக Pathum Nissanka 158 ஓட்டங்களையும், Dinesh Chandimal 93 ஓட்டங்களையும், Kusal Mendis 84 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Taijul Islam 05 விக்கெட்டுக்களையும், Nayeem Hasan 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply