வடக்கில் காணிகளை கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

வடக்கில் 5,941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டத்தரணி M. A. சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (27) விசாரிக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக வலிதற்றதாக்கி இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட, சம்பத் அபேகோன் மற்றும் சம்பத் விஜயரத்ன உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 02ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply