2026 இலிருந்து லஞ்சிட் பாவனைக்கு முற்றாகத் தடை!

2026ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் லஞ்சிட் (Lunch Sheet) பாவனை முற்றாகத் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபை அமர்வு நேற்று இடம்பெற்றது. இந்த அமர்வில் உப தவிசாளர் இ. ஜெயகரன் முன்வைத்த பிரேரணையின் அடிப்படையில், குறித்த தீர்மானம் உறுப்பினர்களின் ஏகமன ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கத்துடன் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply