மதவாச்சி பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.
மதவாச்சி பொலிஸ் பிரிவின் சங்கிலிகந்தராவ பகுதியில் வீட்டில் நீர் சூடாக்கியை (Heater) பயன்படுத்தும் போது சிறுமிக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
மின்சாரம் தாக்கியதை அடுத்து மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்ததாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
