இலங்கையில் காணாமல் போனவர்களிற்கான நீதி ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகின்றது- டொன் டேவிஸ்!

இலங்கையில் காணாமல் போனவர்களிற்கான நீதி ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகின்றது என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவொன்றை இட்டு தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில்,

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகள் செம்மணியில் உள்ள புதைகுழிகள் வேதனையுடன் நினைவூட்டுகின்றன.

நாம் உண்மையிலிருந்து விலகிச் செல்ல முடியாது. காணாமல் போனவர்களுக்கான நீதி ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply